லொறியொன்று மோதியதில் யுவதி பலி

களுத்துறை மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் லொறி ஒன்று மோதியதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார், காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த (வயது – 23) இமாஷா கருணாதிலக்க என்ற யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மீன் வாங்குவதற்காக, கல் அஸ்ஹேன சந்தியில் தாம் பயணித்த மோட்டார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், அதன்போது  ​​களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த லொறியொன்று இருவரையும் மோதியதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் போது, பலத்த காயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது யுவதி உயிரிழந்துள்ளார், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள லொறியின் சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்