லைட்டர் வெடித்ததில் குடும்ப பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பளை இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது – 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.

எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்