லெப்டினன் கேணல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

குருநாகல் – யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த லெப்டினன் கேணலுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் குருநாகல் – யக்கபிட்டிய லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இராணுவ கேணல், இளைஞர் ஒருவரை உதைத்ததுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட குறித்த லெப்டினன் கேணலின் நடவடிக்கைகள் தவறானவை என கண்டறியப்பட்டதால், அவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும், என ராணுவம் அப்போது தெரிவித்திருந்தது.