லின்ஸ்டெட் சாலையின் மோசமான நிலை
-மஸ்கெலியா நிருபர்-
பொகவந்தலாவிலிருந்து லின்ஸ்டெட் (குயினா) நோக்கிச் செல்லும் முக்கிய சாலை கடந்த பல ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளதாக இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக 2.7 கி.மீ கார்பட் போடப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை அதனால் அந்த பகுதியில் இயங்கும் முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களே மண் இடும் சிரமதானத்தில் ஈடுபட்டு சாலை நலமடைய முயற்சிக்கின்றனர்.
மிக கவலைக்குரிய விஷயம் இந்த சாலையைப் பயன்படுத்தி மருத்துவமனையை நாடும் நோயாளிகளில் சிலர் சாலை நிலைமை காரணமாக உயிரிழந்த சோகமான நிகழ்வுகளும்நடந்துள்ளன.
இனி இந்த நிலை தொடரக்கூடாது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி இந்த சாலையை முற்றிலும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
