லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்-

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம் அன்னமேரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எ.மெத்தேயூ கலந்துக் கொண்டதோடு, முக்கிய அதிதிகளாக
எஸ்.சேகர் (SLTES-111)PDCT நுவரெலியா, திருமதி கே.சந்திரமதி (பணிப்பாளர் social welfare manram) மற்றும் விசேட அதிதிகளாக பா.பாலேந்திரன் (சமாதான நீதிவான்), முன்னாள் அதிபர் ஆறுமுகம், கே.பிரதீபன் (social welfare manram), எ.கதாதரன் (DFCC bank) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.

11 மாணவர்களின் பட்டமளிப்பு விழாவோடு, பாடசாலையில் இருந்து தரம் ஒன்றுக்கு சென்று சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது.