லிந்துலையில் முச்சக்கர வண்டி விபத்து : நால்வர் படுகாயம்!
-நுவரெலியா நிருபர்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் முச்சக்கவண்டி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.