லிந்துலையில் மண்மேடு சரிந்து விழும் அபாய நிலை – மக்கள் அச்சத்தில்
-மஸ்கெலியா நிருபர்-
லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழும் அபாய நிலை காரணமாக 21 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் தொடர்ந்து அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அத்தோடு 2012 ஆம் ஆண்டு பாரிய அளவிலான மண்மேடும் சரிந்து விழுந்து உள்ளது இதுவரை சரிந்து விழுந்த மண்ணினை அப்புறப்படுத்தவில்லை குடியிருப்பு பகுதியில் ஊற்று நீர் வடிந்து விடுவதால் எப்போது மண் சரிவு ஏற்படும் என்ற நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
13 வருடங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துமாறு இயற்கை அனர்த்த மத்திய நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை தற்போது பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதியில் பின்புறத்தில் மண் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக எந்நேரத்திலும் இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
இந்த மண் திட்டுகள் இரவு நேரத்தில் சரிந்து விழும் பட்சத்தில் பாரிய உயிர் சேதங்கள் ஏற்படும் என அந்த தொடர் லயின் குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் பீதியுடன் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உடன் கவணம் செலுத்தி பாதிக்க பட உள்ள மக்களின் நலன் கருதி புதிய குடியிருப்புகள் அமைத்து கொடுக்க முன் வர வேண்டும்.