லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் : நாளை எரிவாயு விநியோகம்

நேற்று புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், நாளை எரிவாயு வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை எதிர்வரும் 6 நாட்களுக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.