
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 70 – 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விலை அதிகரிப்பானது நாளை சனிக்கிழமை முதல் அமுலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
