லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயு உள்நாட்டு சிலிண்டர்களின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 2.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்