
லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை ரூ.1,482 ஆகவும், 2.3 கிலோகிராம் எரிவாயுவின் விலை ரூ.694 ஆகவும் காணப்படுகிறது.
