லிட்ரோ எரிவாயு புதிய விலைகள்

லிட்ரோ நிறுவுனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி புதிய விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 271 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 4280 ரூபாய்

5 கிலோ எரிவாயு சிலிண்டர் 107 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1720 ரூபாய்

2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 48 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 800 ரூபாய்