லலித் கொத்தலாவல உயிரிழப்பதற்கு முன் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தாரா?

மறைந்த வர்த்தகர் தேசமான்ய லலித் கொத்தலாவல, உயிரிழப்பதற்கு  முன்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல உயிரிழப்பதற்கு  முன்னர் சட்டத்தரணிகள் குழுவினால் அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டது.

கோல்டன் கீ வைப்பாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கோல்டன் கீ வைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மார்கோ பெரேரா இந்த தகவலை வெளியிட்டார்.

கோல்டன் கீ வைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மார்கோ பெரேரா, இது தொடர்பாக மேலும் சமர்ப்பிப்புகளை முன்வைக்க அனுமதி கோரினார், அதன் பிறகு நீதிமன்றம்  அடிப்படை உரிமைகள்   மனுவின் விசாரணையை மே 08, 2024 க்கு ஒத்தி வைத்தது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த வருடம் ஒக்டோபர் 21 ஆம் திகதி காலமானார்.

லலித் கொத்தலாவல Ceylinco Consolidated இன் முன்னாள் தலைவர் மற்றும் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவர் ஆவார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்