நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ ,கட்டுப்பாட்டுக்குள்

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வன மலை மேல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல்ஏற்பட்டதிடீர்  காட்டுதீயை  அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் (Bambi Bucket)யின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் (04) படையணிக்கு சொந்தமான (பெல்412ஹெலிகாப்டர்) ஒன்று பயன்படுத்தப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கைவிமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்புசெயலாளர் எயார்வைஸ்மார்ஷல்சம்பத்தூயகொந்தாவின் அறிவுறுத்தலுக்கமைய இரத்மலானை விமானப்படை தளத்தின்(பெல்412ஹெலிகொப்டர்) ஒன்று சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் (Bambi Bucket) உதவியுடன் தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மவ்சாகலை நீர்தேக்கத்திலிருந்து நீரைப்பெற்று பரவிக்கொண்டிருந்த தீயை வெற்றிகரமாக அணைத்தது.  பாதுகாப்புஅமைச்சு, அனர்த்தமுகாமைத்துவநிலையம், ஆயுதப்படைகள் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்களும் நாட்டில் எந்தவொரு அவசரநிலையிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24