லண்டன் நகர சபை உறுப்பினர் மூதூர் வருகை!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை பெண் ஆளுமை செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.

மூதூர் சுழலும் சக்கர நற்பணிமன்றம்,மூதூர் -சிறி நாராயணபுரம் மாதர் சங்கங்களின் தலைவி மகேந்திரன் சுகிர்தப்பிரியா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 60 பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளா இங்கிலாந்து -ஹாரோ நகர முன்னாள் நகரபிதாவும் ஹாரோ நகர தற்போதைய நகர சபை உறுப்பினருமான பாபா சுரேஷ் கிறிஷ்ணா அவரது துணைவியும் முன்னாள் ஹாரோ நகர துணை நகர பிதாவுமான சசிகலா சுரேஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஜிவிதன் சுகந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திறந்த மேக் குறிப்பிடத்தக்கது .