
லண்டனில் ‘கோட்டாகோகம’
இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பாராளுமன்றத்துக்கு முன்பாக ‘கோட்டாகோகம’ கிளையை அமைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெறும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமுகமாகவே இவ்வாறு குரல் கொடுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
