
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடவைகள் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.
தமது சட்டத்தரணி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்