
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையை அதிகரித்தது!
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
