லக்னோ அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரான கேன் வில்லியம்சன் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய கேன் வில்லியம்சன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.