கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

இலங்கை ஆசிரியர் சங்கமானது கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையானது றமழான் மாதத்தை விளைதிறன் மிக்கதாக்குவதற்கான வழிகாட்டல் அடங்கிய கடிதம் ஒன்றினை சகலமுஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் கிடைக்கக் கூடியவாறு வழங்கியுள்ளது.

இதன்படி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மத்திவலய செயலாளர் ஆர்.றிக்னாஸ் மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் இவ்வழிகாட்டல்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளரை வேண்டியுள்ளதுடன், இக்கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினையும் கையளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள சகல பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக சகல பாடசாலைகளிலும் இதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறித்த கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொன்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட விசேட தினங்களுக்காக பாடசாலையில் மேற்கொள்கின்ற சிறப்பான நிகழ்வுகளைப் போன்று இந்நிகழ்வையும் பாடசாலைகளின் வசதிக்கேற்றவாறு வலயத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்

மேலும் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சானது றமழான் மாதத்தில்மாணவர்கள்,  ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் உள்ள வசதிக்கேற்பபொருத்தமான தினமொன்றில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது பொருந்தமானதாக கூறியுள்ளதுடன், இக் குறித்த நிகழ்வில் இஸ்லாமிய மாரக்க அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள். கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவ உறுப்பினர்களையும் பங்குபற்றச்செய்து இந்நிகழ்வை திறம்பட மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளது.

அத்துடன், இந்நிகழ்வில் நோன்பின் மகத்துவம். அதன் தாற்பரியங்கள் மற்றும் நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் ஆண்மீக வௌக்க இலக்குகள் பற்றி இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இடம்பெறச் செய்வதோடு, தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியத்தை வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறும் வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்