ரோஹித், கோலியின் ஓய்வு விடயத்தில் அரசியல் தலையீடு?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னணியில் அரசியல் உட்பூசல்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்சன் கவ்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி இன்னும் சில ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கலாம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தாமாக வெளியேற விரும்பவில்லை எனவும் தொடர்ந்தும் விளையாடுவதற்கே விரும்பினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமையை, அவர்களது ஓய்வில் சந்தேகம் இருப்பதாக கார்சன் கவ்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.