படப்பிடிப்பொன்றின் போது மயங்கிவிழுந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ‘தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
மீண்டும் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.