ரோபோவால் இயங்கும் முதல் வர்த்தக நிலையம் திறப்பு
ரோபோவால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையம் சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது.
9 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம், “கால்போட்” என்ற மனித உருவ ரோபோவால் இயக்கப்படுகின்றது.
வர்த்தக நிலையத்தில் பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ரோபோ பல மொழிகளைக் கையாளும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது .
