ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

-கிண்ணியா நிருபர்-

ரோட்டரி இலங்கை மாவட்டம் – 3220 ஆளுநர் டெல்வின் பெரேரா நேற்று சனிக்கிழமை திருகோணமலை ரோட்டரி கிளப்பை விஜயம் செய்தார்.

ஆளுநரின் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் மற்றும் உதவி ஆளுநர் டாக்டர் முரளிதரன் ஆகியோர், அவருடன் இணைந்து கொண்டார்கள்.

திருகோணமலை ரோட்டரி சங்கத்தின் தலைவர் கே.பிரபாகரன் ஆளுநர் மற்றும் விருந்தினர்களை வரவேற்று, 2025 – இது வரையிலான செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக விளக்கினார்.

செல்வா இசை நடன சபா மாணவர்கள் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர்கள்.

எங்கள் ரோட்டரி பத்திரிகையான “ஹாட் ஸ்பிரிங்ஸ் – Hot Springs” ஆசிரியரால் வெளியிடப்பட்டது.

“சூப்பர் சோனிக் மியூசிக் குரூப்” – மாஸ்ட் ஜானி கார்ல் இரண்டு பாடல்கள் பாடி விருந்தினர்களை மகிழ்வித்தார்.

தி/ஸ்ரீ சுமேதங்கரா மகா வித்தியாலயத்தின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் நூலகத்துக்கான புத்தகங்களை ஒப்படைக்கப்பட்டன.

திருகோணமலை ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிய ஆளுநர் டெல்வின் பெரேரா, மேலும் தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய செயல்திறனை அதிகரிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ககளைஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

2026-2027 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு. அருள் வரத ராஜன் நன்றியுரை ஆற்றினார்.