ரொடும்ப ரசிகவின் நண்பர்கள் கைது

மாத்தறை மாகந்துர பகுதியில் வைத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ‘ரொடும்ப ரசிக’வின் நண்பர்கள் நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஏ.கே47 துப்பாக்கி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 9எம்எம் துப்பாக்கியையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொல்லப்பட்ட கிரிமினல் கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய கூட்டாளியாக ‘ரொதும்ப ரசிக’ இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்