ரூ.42 இலட்சத்துக்கு ஷூ

தற்காலத்தில் ஒரு உயர்தரமான ஷூ வாங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த ஆப்பிள் ஷூவை வாங்க வேண்டும் என்றால், உங்கள் கையில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருக்க வேண்டும். அதிர்ச்சி அடைய வேண்டாம். இதற்கு பின்னால் ஒரு கதை மறைந்துள்ளது. உலகின் டெக் அரசனான ஆப்பிள், தங்கள் தயாரிப்புகளுக்கென தனித்துவ அடையாளங்களைக் கொண்டுள்ளது.

சில நாள்களுக்கு முன் 2007ம் ஆண்டு வெளியான 4ஜிபி ஐபோன் வெர்ஷன் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஜூன் மாதம் போனுக்கான ஏலம் $10,000 டொலர் எனும் விலையில் தொடங்கியது. ஏலம் தொடங்கிய சில மணிநேரங்களில் இதற்கு 42 ஆயிரம் டொலர்கள் வரை கோரப்பட்டு புதிய உச்சத்தை பதிவு செய்தது. பின்னர், $ 67,000 டொலர்கள் வரை எட்டிய ஏலம் தொகையானது முடிவில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 644 டொலர் என்ற விலைக்கு இறுதி செய்யப்பட்டது. இந்த 4ஜிபி மாடலின் அசல் விலை கூ499 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 ஆண்டுகளில் இதன் மதிப்பு 318 மடங்கு அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் தற்போது ஷூ ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களிற்கு இது ஒரு உற்சாகமான செய்தியாக இருக்கலாம். புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby’s, ஏலம் எடுப்பதற்கு உண்மையிலேயே தனித்துவமான மற்றும் அரிதான ஒரு பொருளை இங்கே கொண்டு வந்துள்ளது. 90களில் ஆப்பிள் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் ஸ்னீக்கர்களை நிறுவனம் ஏலத்திற்காகக் கொண்டுவந்துள்ளது. இந்த சிறப்பு காலணிகள் ஒருபோதும் பொது சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவரப்படவில்லை. இது தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே ஒரு விரும்பத்தக்க பொக்கிஷமாக இருக்கிறது.

வெள்ளை நிறத்தில் இருக்கும் ஷூ, 90களில் மக்கள் கண்ட ரெயின்போ ஆப்பிள் வடிவத்தை கொண்டுள்ளன. இது ஆப்பிள் வரலாற்றின் ஒரு தனித்துவமான பகுதியாகும். இந்த குறிப்பிட்ட ஜோடி காலணிகள் மிகவும் அரிதான ஒன்றாகும். மேலும் மறுவிற்பனை சந்தையில் அதன் கவர்ச்சி மறுக்க முடியாதது என்று Sotheby வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக காலணிகள் ஆப்பிள் நிறுவனத்தால் நேரடியாக தயாரிக்கப்படவில்லை. மாறாக, குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஒமேகா ஸ்போர்ட்ஸுடன் இணைந்து இந்த சிறப்புத் தொகுப்பை உருவாக்கியது. தொழில்நுட்ப உலகில் மட்டுமின்றி, ஹோண்டா, பிரவுன் போன்ற பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து வரையறுக்கப்பட்ட தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கிய நேரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளின் இந்த பிரத்யேக ஸ்னீக்கர்கள் $50,000 (தோராயமாக ரூ. 42 லட்சம்) ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டது. இதன் அரிதான தன்மைஇ ஆப்பிள் பிரியர்களின் உற்சாகத்தை கருத்தில் கொண்டுஇ இறுதி ஏல விலை இன்னும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காலணிகள் ஆப்பிளின் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன மற்றும் நிறுவனத்தின் பிரத்யேக கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்