
ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட மீன்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரபலமான டோயோசு மீன் சந்தை (Toyosu fish market) செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிகாலையில் ஏலத்தில் மீன்கள்விற்கப்படும். அதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக, ஓமா கடற்கரையில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க கடும் போட்டி அங்கு நிலவும்.
அதேபோல் இந்த புத்தாண்டையொட்டி நடைபெற்ற ஏலத்தில், 234 கிலோ எடை கொண்ட ஒரு டுனா மீன் ரூ.28 கோடிக்கு ஏலம் சென்று சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
சுஷி சான்மாய்என்னும் உணவகச் சங்கிலியின் உரிமையாளரே இந்த மீனை ஏலத்தில் வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்ததுடன் கடந்த 2019 ஆம் ஆண்டில், இதே போல் டுனா மீன் ஒன்றை ரூ.18 கோடிக்கு வாங்கியதாகவும் தெரிய வருகிறது.
கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த இந்த டுனா மீன்கள் அதன் தனித்துவ சுவைக்கு பெயர்பெற்றது. கடலில் வேகமாக நீந்தக்கூடிய இந்த மீன்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது.
ஏலத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து “நான் இந்த மீன் விலை மலிவாக இருக்கும் என நினைத்தேன். இந்த விலையை எதிர்பார்க்கவில்லை” என வாங்கியவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு அழகான ஒரு டுனாவைப் பார்க்கும்போது, என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை. அதிக விலைக்கு வாங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான விலையிலே உணவு கட்டணம் வசூலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.



