
ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு
ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.
ருவாண்டாவில் நடைபெறும் 10வது பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற மாநாட்டுடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது 2023 பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற நிகழ்வுகளில் வெற்றிக்கான கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வாழ்த்துச் செய்தியினை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude இடம் கையளித்தார்.
நவம்பர் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் மற்றும் கோவிட்-19 தொற்று உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலைகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் எந்த வகையில் கையாலாவது, எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாடப்படும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
