ருவன்வெல்லவில் கார் விபத்து: சாரதி படுகாயம்
கேகாலை – ருவன்வெல்ல கரவ்தெனிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக பயணித்த கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாரிய மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
