ரீ-56 ரக துப்பாக்கியுடன் பிக்கு மாணவன் கைது

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் ரீ-56 ரக துப்பாக்கி மற்றும் இதற்கான 161 தோட்டாக்களுடன் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ரம்புக்கனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்கு பௌத்த பல்கலைக்கழகம் ஒன்றின் 3ஆம் ஆண்டில் கல்விகற்கும் பிக்கு மாணவன் என தெரியவருகின்றது. விகாராதிபதி வழக்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விகாரையில் 850 கிராம் கஞ்சாவை வைத்திருந்த மற்றுமோர் பிக்குவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.