ரீ ரிலீஸாகும் படையப்பா

 

75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான எதிர்வரும் 12ம் திகதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்தநிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள காணொளியின் ப்ரமோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.