ரிஸ்வான் சாதனையை முறியடித்தார் அபிஷேக் சர்மா

ஆசியக் கிண்ண வு20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தபோட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறன.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக இந்திய அணியில் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இந்தநிலையில் சுப்மன் கில் 3 பந்துகளுக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளுக்கு அரை சதத்தை விளாசியதுடன் 31 பந்துகளுக்கு 61 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் ஆசிய கிண்ண டி20 தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான் விராட் கோலி ஆகியோரின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

இதன்படி பட்டியலில் முகமது ரிஸ்வான் 289 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் விராட் கோலி 276 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.