
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
