ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து விலகும் ராகுல் ட்ராவிட்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ராகுல் ட்ராவிட் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியின் பொறுப்பிலிருந்து விலகுவதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயணத்தில் பல ஆண்டுகளாக முக்கிய நபராக இருந்து வரும் டிராவிட், ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்கியுள்ளார்.
இதன்படி இதுவரையான காலப்பகுதியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ராகுல் ட்ராவிட் ஆற்றிய சேவைக்கு அந்த அணியின் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.