ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக குமார சங்கக்கார மீண்டும் பதவியேற்க உள்ளார்.
ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமார சங்கக்கார 2021ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மேலாளராக செயற்பட்டு வருகின்றார்.
மேலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி குமார சங்கக்காரவின் மேற்பார்வையின் கீழ் நான்கு சீசன்களில் இரண்டு முறை Play -Off சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.