ராகமையில் மர்மமான முறையில் ஒருவர் மரணம்
கம்பஹா – ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனே வீதி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.
ராகமை, கனே வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே இதன்போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மறுநாள் அதிகாலை வீட்டிற்கு முன்பாக இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்திலிருந்து தடி மற்றும் இரும்பு கம்பி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்