ரஷ்ய – வட கொரிய ஜனாதிபதிகளிடையே தொலைபேசி உரையாடல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவளிப்பதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நாளை (15) நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி வட கொரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
