ரஷ்ய சுற்றுலா பயணி மரணம்

 

ரஷய நாட்டு பிரஜை ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் மரணம்.

ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் எல்ல பகுதியில் உள்ள சிறிய சிறிபாத மலைக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் குறித்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

குறித்த ரஷ்ய (வயது 38) நாட்டு பிரஜையை தெமோதர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் மாரடைப்பின் காரணமாக மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்