ரயில் விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ரயிலுடன் மோட்டார் வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

தனது மகள்களை பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் வண்டியே இவ்வாறு கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராய்ச்சிகட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.