
ரயில் விபத்துக்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்
ரயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை ரயில் திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் இ-கேட் அமைப்பை அமைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கொடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இ-கேட் பரீட்சார்த்த திட்டம், அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கோட்ஜென் இன்டர்நேஷனல் ஆல் இந்த இ- கேட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
