ரயில் விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு
கட்டுகுருந்த புகையிரத நிலையத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த குழந்தை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.