ரயில் முன் பாய்ந்து இளைஞன் மரணம்!
ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்