மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்
-பதுளை நிருபர்-
கொழும்பு பதுளை தொடரூந்து பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை கொழும்பு தபால் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது
மரம் நேற்று சனிக்கிழமை இரவு சுமார் 7.50 மணியளவில் முறிந்து ரயில் பாதையில் விழுந்துள்ளதாகவும், மரம் முறிந்து விழுந்த சத்தம் கேட்டு ரயில் வீதிக்கு அருகில் இருந்த வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் வீதியை பார்த்த போது பாரிய மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்திருந்தமையை அவதானித்துள்ளார்.
இதன் போது, ரயில் சத்தம் கேட்டதும் எதிரே வந்த விசேட ரயில் மின் சமிக்ஞை மூலம் நிறுத்தி பாரிய விபத்தினை தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மரத்தினை அப்புறப்படுத்தும் பணிகளில் இராணுவத்தினரும் ரயில்வே ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்