
ரயில் பொதி கட்டணங்கள் அதிகரிப்பு
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ரயில் பொதி கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டண விபரங்கள் விரைவில் அதிகரிக்கப்படுமென குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
