ரயில் பயணச்சீட்டு மோசடி : கைது செய்யப்பட்ட நபருக்குப் பிணை!

ரயில் இலத்திரனியல் பயணச்சீட்டினை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சுற்றுலா வழிகாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதானவர் இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை வழங்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இணையத்தளத்தில் கொள்வனவு செய்த இரண்டு பயணச் சீட்டுக்களை வெளிநாட்டவர்களுக்கு 27,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

அத்துடன் இந்த வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் மூன்று பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.