ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி: 20 பேர் காயம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடருந்து தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்.
சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த தொடருந்தே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தின் போது தொடருந்தின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
