
ரயில் சேவைகள் வழமைக்கு
இன்று வியாழக்கிழமை முதல் ரயில் சேவை வழமைபோல் இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனில், அடுத்த வாரம் தொடர் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் நேற்றைய தினம் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று இந்த நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
