ரயில் சேவைகளில் தாமதம்

ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.