ரயில் சாரதிகள் இளநீர் அருந்துவதற்கு தடை!

இந்தியாவில் ரயில் சாரதிகள் பணிக்கு முன் அல்லது பணிநேரத்தில் இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துவதற்கு ரயில் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

மேலும் பணிக்கு வரும் போதும் பணி முடிந்து போகும் போது இளநீர், இருமல் மருந்துகள், குளிர்பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் என்பவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதனை செய்யும்போது, சிலருக்கு ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக காட்டுகிறது.

ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

ரயில் சாரதிகள் இளநீர், பழங்கள், இருமல்மருந்து, குளிர்பானங்கள் என்பவற்றை எடுத்துக்கொள்கின்றமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது

இதன் காரணமாக ரயில் சாரதிகள் பணிநேரத்தில் இதுபோன்ற பானங்கள் அருந்துவதற்கு ரயில் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24