ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழப்பு

ஹபரனை பொலிஸ் பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்றுடன் காட்டுயானைகள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்